லவ்வரோடு கூழாங்கல் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா!

4 February 2021, 9:31 pm
Quick Share

நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் நடந்த திரைப்பட விழாவில் தங்களது தயாரிப்பில் உருவான கூழாங்கல் படத்தின் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா நடித்த தர்பார் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றன. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது தவிர ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் இயக்கி வருகிறார்.

நானும் ரௌடி தான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலர்களாக உலா வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் ரெடியாகி வருகின்றனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இதன் மூலமாக சில திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது இவர்களது தயாரிப்பில் கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் என்ற நகரில் நடந்த திரைப்பட விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்பட்டுள்ளது. ஆம், 2021 ஆம் ஆண்டுக்கான டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா (Tiger Competition International Film Festival) இன்று ரோட்டர்டாமில் நடந்தது. இந்த விழாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரௌடி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்த கூழாங்கல் என்ற படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி சட்டையில் புது மாப்பிள்ளை போன்றும், நயன்தாரா மஞ்சள் நிற புடையுடனும் வருகை தந்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0