நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைபடத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் ! அலறும் இன்டர்நெட் !

23 June 2021, 10:17 am
Nayanthara Vignesh Shivan - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடி தான் படத்தில் நடித்தார். இதில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை ஆரம்பம் ஆனது. விக்னேஷ் சிவன் சிம்பு – வரலட்சுமி நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பாடலாசிரியராக பல பாடல்களை எழுதியுள்ளார்.

அடிக்கடி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் விக்னேஷ் சிவன், ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என இன்ஸ்டாவில் கேட்க, அதற்கு ரசிகர் ஒருவர், நயன்தாராவுடன் எடுத்த பேவரைட் புகைப்படத்தை கேட்டா. அதற்கு பதிலளித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் இன்னொரு ரசிகர், நயன்தாராவிடம் பிடிச்ச விசயம் என்னவென்று கேட்க, அவரின் தன்னம்பிக்கை தான் என பதிலளித்துள்ளார். அவர் முத்தம் கொடுத்த புகைப்படம் தான் இன்டர்நெட் Sensation…

Views: - 827

86

27