Night Dinner-க்குப் பிறகு நயன்தாரா இதை செய்வார்..! – சீக்ரெட் உடைத்த விக்னேஷ் சிவன்

By: Udayaraman
28 July 2021, 7:07 pm
Quick Share

நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது.

என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. கமர்சியல் மட்டுமில்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். தற்போது அட்லியின் உதவியோடு பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு திருமணம் இல்லை விக்னேஷ் சிவனிடன் நயன்தாரா கூறியிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த முறை வித்தியாசமாக லைவ் சாட் வந்து உள்ளார். அப்போது நயன்தாராவை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் கேட்டார்கள். இருந்தாலும் கோபம் கொள்ளாமல் பொறுமையாக எல்லா ரசிகர்களுக்கும் பதிலளித்திருந்தார்.

அதில் ஒரு ரசிகர் உங்களுக்கும் நயன் தாரா க்கும் இடையில் உள்ள ஒரு சீக்ரெட் சொல்லுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் வீட்டில் இரவு உணவு முடிந்த உடன் பாத்திரங்களை எல்லாம் நயன்தாரா தான் கருதுவார் என கூலாக பதில் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Views: - 340

5

1