தளபதியின் ஜோடி தற்போது சிம்பு திரைப்படத்தில்

6 November 2020, 8:17 pm
Quick Share

ரசிகர் அனைவரது கவனமும் தற்பொழுது சிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்படம் குறித்தே இருக்கிறது. இத்திரைப்படத்தை மிகக் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார். இத் திரைப்படமானது பொங்கலன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அகர்வால் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க தமன் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் சரண்யாமோகனிடம் சிம்பு நாட்டியம் கற்றுக் கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அவர் இந்த திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரண்யா மோகன் வேலாயுதம் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்தவர் ஆவார்.

இந்த வேளையில் புலி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நந்திதா ஸ்வேதா, சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் தெரியவருகிறது.

Views: - 20

0

0