தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் காமெடி நடிகர் போண்டாமணி. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி பிரபலம்.
சமீபத்தில் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். இவர் சிகிச்சைக்காக பணமின்றி மிகவும் கஷ்டப்படுவதாக வீடியோ ஒன்று வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனையடுத்து தமிழக முதல்வர் உட்பட திரைப்பிரபலங்கள் வரை அவரவர் தங்களால் முடிந்த பண உதவி செய்து அவரை காப்பற்றினர். இது குறித்து பிரபல யூடுப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போண்டாமணி தனக்கு உதவி செய்தவர்களின் லிஸ்ட்டை கூறி நன்றி தெரிவித்தார். போண்டா மணியின் நிலையை அறிந்து மனோபாலா, பார்த்திபன், தனுஷ் என்று பல்வேறு பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பினார்.
ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் அவரை கண்டுகொள்ளாமல் தலையைக்கூட காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த போண்டாமணி வீட்டிலே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உறுதி செய்து இருக்கிறார்கள். அவரது மறைவிற்கு பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சினிமா என்றாலே எப்போதும் உச்சத்தில் இருப்பவர்களை மட்டுமே அரவணைக்கும் போல, போண்டா மணியுடன் பணியாற்றிய பெஞ்சமின், கிரேன் மனோகர் ஆகியோர் வந்து தங்களது இரங்கலை தெரிவித்தனர். ஆனால், 100 கோடி சம்பளம் வாங்கும் விஜய், அஜித், சூர்யா எல்லாம் வர வேண்டாம் ஆனால், ஒரு இரங்கலையாவது தெரிவிக்காதது ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.