உறுதியானது தளபதி 65 கூட்டணி – சர்க்கார் மாதிரி ஏமாத்திடாதீங்க என புலம்பும் விஜய் ரசிகர்கள்..!

18 August 2020, 9:13 pm
Quick Share

விஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களின் பலத்தை நம்புபவர். தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து, அடுத்த படமான தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

தளபதி 65 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணைகின்றனர். இந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும். சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதன் ஒப்பந்த வேலைகள் இன்று சுமூகமாக முடிந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகின. இதை பார்த்த ரசிகர்கள், இந்த Combo அலுத்துவிட்டது என்றும், சர்க்கார் மாதிரி ஏமாத்திடாதீங்க என கூறி வருகிறார்கள்.

Views: - 10

0

0