நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்…! வாய்ப்பை இழந்து தவிக்கும் இயக்குனர்..! ஏத்தி விட்ட ஏணியை மறக்கலாமா..?

Author: Vignesh
7 February 2023, 5:30 pm
Vijay Ileana - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

SAChandrashekar_ActorVijay_updatenews360

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விஜய் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த சிவகாசி மற்றும் திருப்பாச்சி இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படத்தையும் பேரரசு தான் இயக்கியிருந்தார்.

Perarasu-updatenews360

இந்த இரு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பேரரசின் தம்பி முத்து வடுகு நடிகர் விஜய்க்கு கதை சொல்லி தனது படத்திற்கு ஓகே செய்துள்ளார்.

இதனிடையே, பேரரசை தொடர்ந்து அவருடைய தம்பியுடடைய இயக்கத்திலும் விஜய் நடிக்கவிருந்த படம் தான் முரசு. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கும் போது, திடீரென யாரோ சிலர் விஜய்யிடம்
ஏற்கனவே இரு திரைப்படங்கள் பேரரசுக்கு பண்ணியாச்சு, இப்போ மறுபடியும் ஏன் அவருடைய தம்பிக்கு புதிய படத்தை கொடுத்துருக்கீங்க என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Perarasu-updatenews360

இதனை தொடர்ந்து அவங்க குடும்ப படத்திலேயே நடிக்கிறீங்க என்றும், இப்போவே பேரரசு இல்லாம விஜய் இல்ல என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசுறாங்க’ என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் சில படங்களுக்கு பின் முத்து வடுகு இயக்கத்தில் நடிக்கலாம் என்று எண்ணி முரசு படத்தை ஒத்தி வைத்தாராம் நடிகர் விஜய். ஆனால், காலப்போக்கில் அப்படம் அதற்குப்பின் தொடங்கவில்லை. இதுகுறித்து பேசிய பேரரசின் தம்பி முத்து வடுகு ‘விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தேன்’ என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

Views: - 383

3

3