பிரபல நடிகரை காதலிக்கும் சமந்தா…? பார்த்துமா உஷாரா இரு…. அழகு நடிகைக்கே ஆப்பு வச்சவர் அவர்!

Author: Shree
5 June 2023, 7:59 pm
samantha
Quick Share

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமந்தா இளம் நடிகர் விஜயதேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தாவுடன் நெருக்கமாக பழகிய மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும்ம் ஈர்த்தார்கள்.

அதையடுத்து சமந்தா விஜய் தேவ்ராகொண்டவுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு காதலிப்பதை மறைமுகமாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் குஷி படத்தில் இருவரும் நெருக்கமாக பழகுவதோடு படத்தின் காட்சிகளில் உண்மையாகவே தங்களது காதலை வெளிப்படுத்துகிறார்களாம். ஒரு வேலை சமந்தா நாகசைதன்யாவை பிரிந்திருக்கும் வேலையில் தனிமையை தாங்கமுடியாமல் விழுந்திவிட்டாரா? என கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. விஜய் தேவரகொண்டா ஏற்கனவே ராஷ்மிகா மந்தனாவை காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 251

1

1