நீயெல்லாம் உயிர் நண்பனு சொல்லிக்காதே… சஞ்சீவ் உடன் 6 மாதம் பேசாமல் இருந்த விஜய்!

Author: Shree
5 June 2023, 4:57 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு நண்பர்கள் கூட்டம் மிகக்குறைவாகவே உள்ளது. இவருக்கு கல்லூரி படித்தபோது ஏற்பட்ட நட்பு வட்டாரத்தில் ஒரு சில நண்பர்கள் தான் இப்போது இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சஞ்சீவ். சஞ்சீவ் திருமதி செல்வம் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

தொடர்ந்து விஜய்யின் நண்பராக அவரது பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சியம் ஆனார். முதன் முதலில் 2002ம் ஆண்டு உருவான மெட்டி ஒலி சீரியல் மூலம் அவர் சின்னத்திரை வழியாக அனைவரது குடும்பத்திலும் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அதன் பின்னர் சீரியல்களில் நடிப்பதை அறவே நிறுத்திவிட்டு திரைப்படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து நடித்தார். ஆனால் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் விஜய் – சஞ்சீவ் நெருக்கமான உயிர் நண்பர்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் விஜய் ஒரு முறை சஞ்சீவ் உடன் சண்டைபோட்டு சுமார் 6 மாதம் பேசாமல் இருந்துள்ளார்.

அதற்கான காரணம் என்னவென்றால், டிவி சேனல் ஒன்றில் விஜய்யின் நண்பர்கள் எல்லோரும் பங்கேற்ற அதில் சஞ்சீவும் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், திருமதி செல்வன் ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் வரமுடியாது என மறுத்ததால் விஜய் அவர் மீது கோப்பட்டு 6 மாசம் சஞ்சீவ் உடன் பேசவே இல்லையாம். பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த செய்தி தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Views: - 604

23

15