மாஸ்டர் படத்தை ரசிகர்களோடு ரசிகராக பார்த்து மகிழ்ந்த விஜய் – வைரல் வீடியோ !

16 January 2021, 11:22 am
Quick Share

இப்போ வந்துரும், தீபாவளிக்கு வரும், மே மாசம் வந்துரும், என்று அப்படி இப்படின்னு சொல்லி பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் போகி அன்று ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். படத்திற்கு ஓகே, சுமார், Average என்று விமர்சனங்கள் வர எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஒரு தரப்பு ரசிகர்கள் 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்த்தனர்.

படத்தில் இரண்டு ஹீரோ என்பதால், தன்னை அறியாமலே ஒரு கேரக்டருக்கு Weight ஏறிவிட்டது. அப்படித்தான் இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜய்சேதுபதி விஜயை விட ஸ்கோர் செய்துவிட்டார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களோடு ரசிகராக விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ரசிகர்களோடு ரசிகராய் அமர்ந்து படம் பார்த்தனர். தற்போது இந்த வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது

Views: - 12

0

0