உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்து திரையரங்குங்களில் ஓடியது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் லோகேஷ் கதையில் கோட்டைவிட்டதாக பலர் கூறி வருகின்றனர். பாடல்களும் மனதில் பதியும்படி இல்லாமல் வழக்கம் போன்ற அனிருத் ஸ்டைலிலே இருந்தது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என தகவல்கள் கூறுகிறது.
இதனால் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். ஆம், அவர் தனது ஹிட் படங்களின் லிஸ்டில் லியோவை இணைக்கவே இல்லை என ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லியோ படத்தில் நான் செய்த தவறு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சென்றதுதான். அதை நான் இனி செய்யப்போவதில்லை. லியோ படத்தின் இரண்டாம் பாதி வொர்க் அவுட் ஆகவில்லை என வந்த விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறி உள்ளார். இதனால், லோகேஷ் கனகராஜ் இப்படி பேசியதின் காரணமாக விஜய் ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.