தளபதி 65 அப்டேட் கேட்ட நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன்!

28 January 2021, 11:13 pm
Quick Share

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி65 படத்தின் அப்டேட் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் டுவிட்டரில் கேட்டுள்ளா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். குடும்ப கதையை மையப்படுத்தி ஏராளமான படங்களில் நடித்து நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களின் படப்பிடிப்புகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த இரு படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இது குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மொத்தமாக ஜாலியான அதிர்வளைகள். எனது அன்பான நண்பர்கள் சிவகார்த்திகேயன், அனிருத், சிபி சக்கரவர்த்தி, கலை அரசு, சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம், லைகா நிறுவனம் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நன்றி அண்ணா. டாக்டர் அப்டேட் எதுவும் இல்லயா? விஜய் சார் படம் அப்டேட்??? (எப்படி கோர்த்து விட்டேனா) என்று கேட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பூவையாரும் 3ஆவது முறையாக விஜய்யுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வரும் ஏப்ரல் மாதம் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும், வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் குறித்து தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0