திரையரங்கை சூறையாடிய விஜய் ரசிகர்கள் – ஷாக்கான திரையரங்கு உரிமையாளர்..!

Author: Rajesh
3 April 2022, 11:08 am
Quick Share

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தான் விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதனிடையே பீஸ்ட் படம் குறித்த ரசிக்கர்களின் எதிர்ப்பார்ப்பு எகிறி வருகிறது. அதற்கு ஏற்றது போல தயாரிப்பு நிறுவனமும் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் எப்போது வரும் என ரசிகர்களின் விருப்பதை தற்போது தயாரிப்பு நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் பட ட்ரெய்லரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இதில், சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். நஜிக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இதனையடுத்து பெரும்பாலான திரையரங்குகளில் விஜய் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அ;போது திருநெல்வேலியில் உள்ள திரையரங்கை துவம்சம் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள். இதனையடுத்து அதிர்ச்சியான திரையரங்கு உரிமையாளர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர்.

Views: - 470

1

0