எவ்வளவு வயதானாலும் அப்பா அப்பா தான்.. அஜித் தந்தை மறைவு குறித்து விஜய் தந்தை உருக்கம்!!

தனது தந்தை இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜித் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த அஜித்தின் தந்தை, திடீரென இன்று காலை காலமானார்.

இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இறுதிச்சடங்குகளுக்கு பிறகு, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தந்தை சுப்ரமணியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

இதனிடையே, நடிகர் அஜித்குமார் தரப்பில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எங்களது தந்தையார்‌ பி.எஸ்‌.மணி (84 வயது) அவர்கள்‌ பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில்‌ இருந்து வந்தார்‌. இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில்‌ உயிர்‌ நீத்தார்‌. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால்‌ பாதிக்கப்பட்டிருந்த எங்கள்‌ தந்தையை அன்போடும்‌, அக்கரையோடும்‌ கவனித்து வந்தும்‌, எங்கள்‌ குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும்‌ நாங்கள்‌ கடமைப்பட்டுள்ளோம்‌.

எங்கள்‌ தந்தையார்‌ சுமார்‌ அறுபது ஆண்டு காலமாக எங்கள்‌ தாயின்‌அன்போடும்‌, அற்பணிப்போடும்‌ ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்‌. இந்த துயர நேரத்தில்‌, பலர்‌ எங்கள்‌ தந்தையாரின்‌ இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும்‌, எங்கள்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ சொல்வதற்காகவும்‌ எங்களை தொலைபபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல்‌ அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்‌.

தற்போதுள்ள சூழலில்‌ எங்களால்‌ உங்கள்‌ அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில்‌ தகவல்‌ அனுப்ப இயலாதமையை நீங்கள்‌ புரிந்துகொள்வீர்கள்‌ என நம்புகிறோம்‌. எங்கள்‌ தந்தையாரின்‌ இறுதி சடங்குகள்‌ ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்‌. எனவே, இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும்‌ எங்களுடைய துயரத்தையும்‌, இழப்பையும்‌ புரிந்துகொண்டு, குடும்பத்தினர்‌ துக்கத்தை அனுசரிக்கவும்‌, இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில்‌ செய்யவும்‌ ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்‌, எனக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இவருடைய, மறைவுக்கு ஏ.ஆர். முருக்தாஸ், ஏ.எல்.விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், நடிகர்கள் பிரசன்னா, மிர்ச்சி சிவா என பலரும் நேரில் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய இரங்கலையும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல மூத்த இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் அவர், அஜித் குமார் தந்தையின் மரண செய்தியை கேட்டு வருத்தமடைந்ததாகவும், எவ்வளவு வயதானாலும் அப்பா அப்பா தான் என்றும், அந்த இழப்பு மிகவும் இழப்பாகும் எனவும், தந்தையை இழந்து தவிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு மன ஆறுதலை தரும்படி இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

31 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.