கிராமத்துக்கு கோவில் கட்டித் தந்த நடிகர் விஜய்… நன்றி மறக்காத கிராம மக்கள்… விஜய்க்கு சிலை வைத்து நன்றிக் கடன்..!

Author: Vignesh
22 November 2022, 1:30 pm
vijay updatenews360
Quick Share

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு உருவாகி வருகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அண்மையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை அழைத்து சந்தித்தார் விஜய். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் பேசியபோது, ‘ தங்களுடைய கிராமம் மிக சிறுது. எங்களுடைய கிராமத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது, தெரு வசதியும் கிடையாது. ஆனாலும் எங்கள் கிராமத்திற்கு விஜய் வந்தார்.

Vijay - Updatenews360

கொஞ்ச நேரம் எங்களுடன் இருந்துவிட்டு தான் சென்றார். எங்கள் ஊருக்கு அன்னதானம் எல்லாம் செய்துள்ளார். எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் அண்ணாவின் படங்களுடைய பெயர்களை தான் வைக்கிறோம்.

அப்படி அவர் மேல் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறோம். எங்கள் ஊருக்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார் விஜய். அதுமட்டுமின்றி முதன் முதலில் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தது எங்கள் கிராமத்தில் தான் ‘ என்று அந்த ரசிகர் கூறியுள்ளார்.

Views: - 167

0

0