நடிகர் விஜய் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக தயாராகி உள்ளது. இந்நிலையில் இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் உடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், நடிகைகள் மீனாக்ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் ஒட்டுமொத்த வெங்கட்பிரபுவின் கேங்கும் இணைந்துள்ளது.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமும் ஒன்றுகூட பூஜை செய்த வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது. பல வருடங்களுக்கு விஜய்யின் தளபதி 68 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இப்படத்தில் நடிக்க விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில் செம ஹேப்பி என அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். எனவே இன்று முதல் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி விஜய் ரசிகர்களை அடுத்தடுத்து மகிழ்ச்சி படுத்தும் என நம்பலாம். இந்நிலையில் இப்படத்திற்காக விஜய் பீல்டவுட் ஆன நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை கொடுத்துள்ளார். குறிப்பாக நடிகர் பிரசாந்த், நடிகர் அஜ்மல் அமீர், நடிகை லைலா, நடிகை சினேகா உள்ளிட்ட பிரபலங்களுக்கு தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாழ்க்கை உருவாகவுள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.