14 வருடங்கள் கழித்து விஜய் செய்யும் விஷயம்.. அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா?..

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.

இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. அது என்னவென்றால், தற்போது இந்த படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கொண்டு வர இருக்கிறார்கள்.

இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு கேட்டு இருக்கிறார். கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரிலீஸ்க்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று மட்டும் கேப்டன் குடும்பத்தினர் நிபந்தனை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இனிவரும் நாட்களுக்கு படம் குறித்த நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் பிளான் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

முன்பே கூறியிருந்தது போல், படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். அதன் முதற்படியாக ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் நடந்துள்ளது. பிரபல டி சீரிஸ் நிறுவனம் விஜயின் 68வது படத்தின் ஆடியோவை 28 கோடி கொடுத்து வாங்கி உள்ளார்களாம். இவர்கள் இதற்கு முன்பு விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ் 10 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விஜய் நடித்துவரும் கோட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. இதனால், 14 வருடங்கள் கழித்து விஜய் கேரளாவுக்கு செல்ல இருக்கிறார். இதற்கு முன், காவலன் படப்பிடிப்புக்காக விஜய் கேரளாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

2 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

3 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

3 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

4 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

5 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

5 hours ago

This website uses cookies.