நடிகர் விஜய்யின் மகன் சீசன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் நேற்று லைக்கா நிறுவனம் தறிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தன் மகன் ஹீரோவாக வேண்டும் என்று தான் ஆசைபட்டாராம். அதற்காக ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டாராம். ஆனால், மகன் சஞ்சய்யோ தனக்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வமே இல்லை. இயக்குனராக தான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றார்.
இதனால் விஜய் சரி… நீ படம் தானே இயக்கனும் கதை தயார் பண்ணிட்டு சொல்லு நானே அந்த பட்டதில் ஹீரோவாக நடிக்கிறேன் என கூறினாராம். இதனால் கடுப்பான சஞ்சய்… என்னுடைய கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள். யாரை தேர்வு செய்யலாம் என எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என கூறினாராம். சரி…. அட்லீஸ்ட் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுப்பா. நான் நடித்தால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகும். உன்னுடையே ஆரம்பமே சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் எனக்கும் மகனின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசை இருக்காதா? என சொல்லி வாய்ப்பு கேட்டாராம் விஜய்.
அதற்கு சஞ்சய்… அப்பா ப்ளீஸ்பா என்னை விடுங்க…. நீங்க உங்க லைன்ல போங்க, நான் என் லைன்ல போறேன். ஒரு அப்பாவா நீங்க எனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும் என கூறி பேச்சை நிப்பாட்டிகொண்டாராம். அதன் பின்னர் தான் லைக்கா நிறுவனத்திடம் இயக்குனராக கையெழுத்து போட்டார். இந்த சான்ஸ் விஜய் வாங்கி கொடுத்தது தான் என செய்திகள் வெளியானது. ஆனால், உண்மையில் விஜய்யின் மாமனார் தான் பேரனுக்கு லைக்கா நிறுவனத்திடம் வாய்ப்பு வாங்கி கொடுத்தாராம். அவர் லண்டனில் மிகப்பெரிய தொழில் அதிபர். லைக்கா நிறுவனத்தின் ஓனர் சுபாஸ்கரன் அவருக்கு நெருங்கிய நண்பரும் கூட.
தொழில் ரீதியான சந்திப்பு ஒன்றில் தான் தனக்கிருக்கும் செல்வாக்கை வைத்து பேரனுக்கு சான்ஸ் கொடுக்க சொல்லி கேட்டதாகவும் உடனே ஒப்புக்கொண்டதாம் லைக்கா நிறுவனம். இந்த விஷயம் விஜய்க்கு புகைப்படங்கள் வெளியான பிறகு தான் தெரியுமாம். எனவே சஞ்சய் அப்பாவை மதிக்காமல் அவரிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் இப்படி ஒரு காரியத்தை செய்ததால் விஜய் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை தற்போது சைலெண்டாக லைக்கா நிறுவனம் போட்டுள்ளார்களாம். அந்த பூஜையில் விஜய் பங்கேற்காததை வைத்து பலர் கண்டபடி செய்திகளை பரப்பி வருகிறார்கள். இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆவது குறித்து விஜய் ரொம்பவே சந்தோஷமாக இருப்பார் என்று நடன இயக்குனர் நடிகர் பிரபு தேவா கூறியிருக்கிறார்.
எனக்கே இப்படி இருக்கு என்றால் அவருக்கு எப்படி இருக்கும், அவர்களுக்கு அட்வைஸ் எல்லாம் செய்ய கூடாது தோல்வியை சரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரபுதேவா கூறி அனைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.