வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், பெரும்பாலான ஆறுகள் நிரம்பி விட்டதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மார்பளவு தண்ணீர் இருந்ததால் பலர் முதல் தளத்திலும், மொட்டை மாடியிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பேரிடம் மீட்பு குழுவினர் தீயணைப்பு குழுவினர் வீட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழைநீர் இன்னும் வடியாததால் பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள் படகில் வீடு தேடி சென்று உதவி செய்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், தான் ஒரு சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது, அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, ஒரு இடத்தில் மழை நீர் வெளியேராமல் மக்கள் அவதிப்பட்டு வர யாரோ சில விஷமிகள் அந்த தண்ணீரில் Chemicalஐ கலந்துவிட்டுள்ளனர். இந்த தகவல் விஜய் மக்கள் இயக்கத்தினர் காதுக்கு செல்ல அவர் நேரில் சென்று சில உதவிகளை செய்து உள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா, என்ன கொடுமை, வாழ்த்துக்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் என கமெண்ட் செய்து உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.