கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருகிறார் விஜய். அந்த வகையில் சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விஜய்யின் கையால் ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த கல்வி விருது வழக்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் மே 30 ஆம் தேதி மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஷெரட்டான் ஹோட்டலில் இக்கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இந்த முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகத்தின் அறியலூர், இராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு விஜய் பாராட்டுச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்க உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.