தீபாவளிக்கு சரவெடியாக இறங்கிய மாஸ்டர் படத்தின் டீஸர் ! கொளுத்தி போடு பட்டாசை !

14 November 2020, 6:21 pm
Master Teaser - Updatenews360
Quick Share

அன்னிக்கே சொன்னோம், மாஸ்டர் Teaser தீபாவளி அன்று Release செய்தால், விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய சரவெடி என்று… சொன்னபடி இப்போது டீஸர் ரிலீஸ் ஆகி செம்ம மாஸ் கிளப்பி கொண்டிருக்கிறது.

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நொடி வரை படம் எப்போது வெளியாகும் என்று தயாரிப்பாளர்களுக்கும் , விஜய்க்கும் தெரியும் என்பது நம் யூகம்.

அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. வருஷா வருஷம் தளபதி படத்தை Theater-இல் பார்த்து விசில் அடித்த ரசிகர்களுக்கு, இந்த தீபாவளிக்கு தளபதி படம் வரவில்லையே என யோசித்து கொண்டிருந்தார்கள், தற்போது டீஸரை பார்த்து பட்டாஸ் வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

டீசரில் விஜய் எதுவும் பேசவில்லை, விஜயை பற்றிதான் எல்லோரும் பேசி கொண்டிருக்கிறார்கள், விஜய் சேதுபதி உட்பட… இந்தநிலையில், வலிமை Update வரவில்லை என்று ஏக்கத்தில் இருக்கிறார்கள் நம்ம தல ரசிகர்கள் என்பது கூடுதல் தகவல்….

Views: - 62

0

0