முதல் முறையாக அதிக பொருட் செலவில் விஜய் படம்.?

Author: Rajesh
22 January 2022, 5:59 pm
Quick Share

தமிழ் திரையுழகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் படம் வசூலில் புதிய சாதனைகளை படைக்க தயாராகவுள்ளது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது. விஜய்யின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 2816

6

0