விஜய் மக்கள் இயக்கம் பிசினஸ்மயமாகி விட்டது- எஸ் ஏ சி பரபரப்பு குற்றச்சாட்டு

28 January 2021, 1:41 pm
Quick Share

பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் தற்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். ரஜினிக்குப் பின் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் தான். அதுமட்டுமில்லாமல் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதனால் அவர் இன்னும் பத்து வருடத்திற்குள் அரசியலுக்குள் வரவேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில் “விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் அரசியல் வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டி சென்ற வருடம் அக்டோபர் மாதம் அவருக்காக தான் கட்சியை ஆரம்பித்தேன். ஆனால் அவரை வேறு சிலர் குழப்பி வருகின்றனர். நான் செய்வது நல்லதுதான் என்பது அவருக்கு பின்பு புரியும். என்னை போன்ற ஒரு தந்தை கிடைப்பது பெரிய விஷயம். இந்த வயதில் நான் வாக்கு அரசியலில் ஈடுபட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. நான் விஜய்க்காக செய்யும் விஷயங்கள் இங்கு தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது” என்றார்.

அதுமட்டுமில்லாது விஜய் மக்கள் இயக்கமானது வியாபார நோக்கில் போய்க்கொண்டிருக்கிறது. 100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி வெளியில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். தளபதி விஜய்யின் அப்பா என்று கொண்டாடினால், இவர் விஜய்க்கே ஆப்பு வைக்கிறார் என நொந்து கொள்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

Views: - 0

0

0