கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் வழங்கி வருகிறார் தவெக தலைவர் விஜய். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
இதில் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 51 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையும் விருதும் வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், “நேற்று குஜராத்தில் சோகத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விபத்து நடந்தது. விபத்து சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கும்போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை. ஆதலால் விபத்தில் மரணித்த அனைவருக்காகவும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். அதன் பின் இரண்டு நிமிடங்கள் அந்த அரங்கில் இருந்த அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் விருதும் அளிக்கத் தொடங்கினார் விஜய். அப்போது ஒரு மாணவரின் தந்தை ஒருவர், “2026 ஆம் ஆண்டு விஜய் அவர்களை முதல்வர் ஆக்குவோம்” என பேசினார். அதனை தொடர்ந்து பேசிய விஜய், “உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். 2026-ஐ பற்றி பேசாதீர்கள். என்னை இளைய காமராஜர் எனவும் கூறாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். விஜய் இவ்வாறு பேசிய வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.