அடேங்கப்பா.. இம்புட்டா.. விஜய் கடைசி படத்திற்காக வாங்கவுள்ள சம்பளம் இத்தனை கோடியா?..

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால் சிலரோ அவர் கட்சி எல்லாம் தொடங்கி தேர்தலை சந்திக்க மாட்டார், ரஜினி போல
சும்மா பேசி விட்டு கடைசி நேரத்தில் ஒதுங்கி விடுவார் என்று கிண்டலாகவும் விமர்சித்தனர்.

இந்த வாதம் முற்றிலும் தவறானது, என்பதை உணர்த்தும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் பிப்ரவரி இரண்டாம் தேதியான நேற்று வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் பிரதான இலக்காக இருக்கும் என்பதை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறார். 1984ல் வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் விஜய் சுமார் 30 ஆண்டுகளுக்கு கழித்து ஏறக்குறைய அதே பெயர் வரும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை தனது கட்சிக்கு சூட்டியிருப்பதுதான்
இதில் ஆச்சரியமான விஷயம்.

இந்நிலையில், சினிமாவில் முன்னணி நடிகராக டாப்பில் இருக்கும் இவர் இப்போது கமிட் செய்துள்ள படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், அவர் நடிக்கப் போவதில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி பெயர் அறிவித்ததில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. நிறைய பாராட்டுக்கள் பல எதிர்மறை விமர்சனங்கள் என வருகின்றன.

இந்நிலையில், அதன்படி விஜயின் கைவசம் தற்போது, இரண்டு திரைப்படங்கள் உள்ளது. ஒன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் மற்றொரு திரைப்படம் தான் தளபதி 69 இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் தான் தளபதி 69 படத்தை தயாரிக்க போவதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

மேலும், வினோத் இயக்கப் போகிறார் என்றும், அதேபோல் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி போன்றவர்களின் பெயரும் இந்த லிஸ்டில் அடிபடுகிறது. இன்னும் சில மாதங்களில் தளபதி 69 படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தளபதி 69 படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூபாய் 250 கோடி வரை சம்பளம் வாங்க போகிறார் என்றும், தற்போது நடித்து வரும் கோட் படத்திற்கு நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் எனவும் தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

9 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

10 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

10 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

11 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

11 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

12 hours ago

This website uses cookies.