இப்படியொரு டைட்டிலா? விஜய் சேதுபதியின் பாலிவுட் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

25 February 2021, 9:07 pm
Quick Share

விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரது நடிப்பில் உருவாகும் பாலிவுட் படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளத

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒரு நடிகர் என்ற கெத்து, தலைக்கணம் என்று எதுவும் இல்லாமல், மிகவும் எளிமையாக இருக்கிறார். எந்த ரசிகரையும் கிட்டவே நெருங்க விடாத நடிகர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது ஒரு ரசிகனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிடும் அளவிற்கு எப்போதும் ரசிகனை ஒரு ரசிகனாக நேசிப்பவர். நடிகரோடு மட்டுமல்லாமல், வில்லன், குணச்சித்திர ரோல், திருநங்கை என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக நடிப்பவர்.

தற்போது காமெடி வேடத்திலும் நடித்து வருகிறார். ஆம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைகார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து மற்றொரு பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்தாதூன் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் பாலிவுட் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படத்திற்கு மேரி கிறிஸ்துமஸ் என்று டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் பட த்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் புனேயில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 2671

3

2