சினிமா / TV

என்னை மன்னிச்சிடுங்க? சூர்யா சேதுபதி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி குழந்தை நட்சத்திரமாக விஜய் சேதுபதியின் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது “பீனிக்ஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார். 

இதில் சூர்யா சேதுபதியுடன் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஜலட்சுமி அனல் அரசு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

மிரட்டல் வந்ததாக புகார்

“பீனிக்ஸ்” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா சேதுபதி வாயில் பபுள்கம் போட்டு மென்றபடியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய தொடங்கினர். மேலும் அதற்கு முந்தைய விழா ஒன்றில் “என்னுடைய அப்பா வேறு நான் வேறு” என பேசியதும் ட்ரோலுக்குள்ளானது.

அந்த வகையில் இந்த வீடியோக்களை நீக்குமாறு விஜய் சேதுபதி தரப்பில்  இருந்து மிரட்டல் வந்ததாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு வந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். மேலும் அவ்விழாவில் தனது மகன் சூர்யா சேதிபதிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.  

Arun Prasad

Recent Posts

சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…

24 minutes ago

ரொம்ப டார்ச்சர் பண்றங்க.. என் சாவுக்கு காரணம் திமுகவினர்தான் : அதிமுக ஐடி விங் நிர்வாகி தற்கொலை!

தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…

47 minutes ago

எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?

லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…

56 minutes ago

அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?

அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…

2 hours ago

கள்ளதொடர்பால் கணவன் கொலை.. இரவு முழுவதும் மனைவி செய்த பகீர் சம்பவம்!!

கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…

3 hours ago

காரில் கடத்தப்பட்ட 13 வயது சிறுவன்.. காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு : அதிர்ச்சி தகவல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…

4 hours ago

This website uses cookies.