கமலாவுல கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி!

14 January 2021, 6:41 pm
Quick Share

கமலா சினிமாஸ்க்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தை பார்த்து மகிழ்ந்ததோடு, அங்கு கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், ரம்யா சுப்பிரமணியன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டுநேற்று திரைக்கு வந்த மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா பிரபலங்களும் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

ஆம், லோகேஷ் கனகராஜ், அனிருத், மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தணு, மகேந்திரன் ஆகியோர் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதே போன்று நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் உதயா, அட்லி, மலையாள நடிகர் திலீப், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதே போன்று தான் விஜய் சேதுபதியும் முதல் நாள் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

ஆனால், முதல் ஷோ பார்க்கவில்லை. சென்னையில் உள்ள கமலா திரையரங்கிற்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதி, அங்கு மாஸ்டர் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். அதோடு கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளார். அவருடன் ரமேஷ் திலக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படம் சென்னையில் மட்டும் ரூ.1.21 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

இதே போன்று ஆந்திராவில் ரூ.5.74 கோடி வசூல் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த படங்களில் சர்கார் முதலிடம், பிகில் 2ஆவது இடமும், மெர்சல் 3ஆவது இடங்களும் பிடித்துள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து மாஸ்டர் 4ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0