முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் மறைவுக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல் !

19 October 2020, 6:52 pm
Quick Share

கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி இன்று 800 திரைப்படத்திலிருந்து விலக போவதாக அறிக்கை கொடுத்துவிட்டு முதல்வர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று, அங்கு அவரது தாயின் உருவப்படத்திற்கு பூவை தூவி அஞ்சலி செலுத்தினார். அதோடு மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி முதல்வருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பினார்.

Views: - 33

0

0