நயன்தாரா,சமந்தாவுடன் Footboard-ல் Travel பண்ண விஜய் சேதுபதி ! லீக் ஆன வீடியோ..!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2021, 1:13 pm
Bus Vijay Sethupathi Samantha Nayan - Updatenews360
Quick Share

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான உடல் மொழி கொண்ட நடிப்பாலும், தனது யதார்த்தமான குரல் வளத்தாலும், நல்ல குணத்தாலும் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம் ஆகி விட்டார்.
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, எல்லா வித மக்களுக்கும் உதவும் மனம் கொண்டவர். விஜய் சேதுபதி தற்போது அரைடஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார், லாபம் ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் காத்துவாக்குல இரண்டு காதல், கமலுடன் விக்ரம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். காத்து வாக்குல 2 காதல் படத்தில், நயன்தாரா,சமந்தாவுடன் Footboard-ல் விஜய் சேதுபதி travel செய்வது போல வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. ” உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு சார்” என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 1228

36

8