தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். விஜய் சேதுபதியின் மகன் நானும் ரவுடிதான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பப்ளி லுக்கில் சிறுவனாக இருந்த சூர்யா சேதுபதி தற்போது ஸ்லிம் பிட் தோற்றத்தில் ஹீரோவாகிவிட்டார்.
ஆம், விஜய் சேதுபதி மகன் சூர்யா, ‘ஃபீனிக்ஸ் வீழான்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகும் இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அவரது பேச்சு அப்பா விஜய் சேதுபதி போலவே தெளிவாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.