“தமிழ் சினிமாவில் சண்டை போட எவனுமில்லை” – பாக்ஸ் ஆஃபிஸில் கதாநாயகனாக ஜொலிக்கும் தளபதி விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்

27 February 2021, 3:23 pm
Quick Share

இந்திய சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றதற்கு அந்தப் படம் எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடியுள்ளது என்று கணக்கிடப்படும். சந்திரமுகி படம் இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இதுபோல ரஜினி படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல நாட்கள், மாதங்கள் ஏன் வருடக்கணக்கில் கூட ஓடியிருக்கிறது.

அதன் பின் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்தை அடைந்தது. தொடர்ந்து வெளிவரும் படங்கள் காரணமாக ஒரு குறிப்பிட்ட படம் நீண்ட நாட்களாக தியேட்டர்களில் ஓட்ட முடியவில்லை. எனவே எத்தனை நாட்கள் என்பதை விடுத்து தியேட்டர்களில் பாக்ஸ் ஆபீஸ் எனப்படும் கவுண்டரில் எவ்வளவு கலெக்சன் எடுத்துள்ளது என்று தீர்மானிக்கப்படும் அளவுகோளாக மாறி இருக்கிறது.

அதை வைத்து பார்த்தால் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரிந்த படங்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினியின் இடத்தை விஜய் பிடிப்பார் என்று கூறி வந்த நிலையில் அதை நிரூபிக்கும் விதமாக விஜய்யின் படங்களே அதிகம் முன்னால் வந்து நிற்கின்றன.

அதில் மாஸ்டர் முதலிடத்திலும், பாகுபலி இரண்டாம் இடத்திலும் உள்ளது. பிகில், மெர்சல் ஆகிய படங்கள் முறையே மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடத்திலும் உள்ளது. விஜய்க்கு சரிசமமான போட்டி என்று கூறப்பட்ட அஜித் நடித்த படமான விஸ்வாசம் 4வது இடத்தில் உள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகன் விஜய் என்பது உண்மையாகியுள்ளது. இந்த லிஸ்டை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இதை பகிர்ந்து “வாள் தூக்கி நின்னான் பாரு #தளபதி விஜய்.. தமிழ் சினிமாவில் சண்டை போட எவனுமில்லை” என ட்ரெண்டிங் ஏற்றார்போல் கேப்ஷன் போட்டு வருகின்றனர்.

Views: - 13

9

2