“போடு வெறித்தனம்…” இது தளபதியோட Beast Mode…! தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக், Title இதோ…!

21 June 2021, 6:10 pm
Quick Share

மாஸ்டர் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் வந்து நடத்த இருந்தார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது தளபதி 65 பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு, அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் பரவியுள்ளது.

இந்த நிலையில், வரும் 22 – ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் போல் அமைந்துள்ளது. Beast என்று பெயர் வைத்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சும்மா முருகேற்றிய உடலில் துப்பாக்கியை பிடித்துகொண்டு மாஸாக நிற்கிறார் விஜய். அப்போ இந்த 2022 பொங்கலுக்கு சூப்பர் Collection மா…!

Views: - 605

54

2