அதே Shoe.. விஜயின் அரசியல் வாழ்க்கையை சிக்கலாகும் திரிஷா?.. லிஸ்ட்டில் சிக்கிய AK..!

Author: Vignesh
24 June 2024, 11:54 am
Vijay - Updatenews360
Quick Share

40 வயதுக்கு மேலாகியும் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது, டாப் நடிகர்களின் பட்டியலில் அடுத்தடுத்து நடித்தும் வருகிறார். பிஸியான ரெட்டியூலில் இருந்து வரும் த்ரிஷா குறித்து பல சர்ச்சைகளும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுதான் உள்ளது.

Vijay - Updatenews360

அதில், முக்கியமான ரூமர் செய்தியாக வெளியாகி வருவது விஜய், திரிஷா காதல் விவகாரம் தான். லியோ, படத்தில் இருவரும் இணைந்து நடித்தது முதல் ஷூட்டிங்கிற்காக இருவரும் ஜோடியாக சென்றது வரை லியோ படத்தில் முத்த காட்சி வரை பல விஷயங்களை த்ரிஷா, விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்தது.

Vijay - Updatenews360

அதேபோல், சமீப காலமாக நடிகை திரிஷா, விஜய் உடன் தான் வெளிநாட்டில் ரகசியமாக சுற்றி வருகிறார் என்று கூறி சில புகைப்படங்களும் இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில், விஜயின் பிறந்தநாளுக்கு திரிஷா வாழ்த்து கூறி வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ஏற்கனவே த்ரிஷா உட்கார்ந்து இந்த பக்கத்தில் ஒரு ஷூ தெரிய எடுத்த புகைப்படத்தையும் வைத்து விஜயின் ஷூதான் அது என்று அஜித் ரசிகர்கள் கூறி கிண்டல் செய்து வந்தனர்.

Vijay - Updatenews360

இந்நிலையில், அந்த லிஸ்டில் நடிகர் அஜித்தின் ஷூவும் இணைந்துள்ளது. அஜித் வெளிநாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங் நடிக்கும் போது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார். அதில், அஜித் அணிந்திருந்த ஷூ கூட த்ரிஷாவின் அந்த புகைப்படத்தில் இருக்கும் ஷூவுடன் ஒத்துப் போகிறது என்று கூறி விஜய் ரசிகர்களும் மறுபுறம் கிண்டல் செய்து வருகின்றனர். அரசியலில், நுழைந்திருக்கும் விஜய்க்கு இது போல் ஏகப்பட்ட நெகட்டிவ் செய்திகள் குவியத்தான் செய்யும் என்று பலரும் கருத்துக்களில் தெரிவித்து வருகின்றனர்.

Vijay - Updatenews360
Views: - 109

0

0