பெண்கள் மத்தியில் சினிமா படங்களை விட சீரியலுக்கு தான் மவுசு ஜாஸ்தி. அதிலும், ஒரு சில சீரியல்களுக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் தீவிர ரசிகை மற்றும் ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி நீங்கள் விரும்பி பார்க்கும் விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக விஜய் டிவியில் காலை முதல் இரவு வரைக்கும் சில சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, தென்றல் வந்து என்னை தொடும், ஆகா கல்யாணம், காற்றுக்கென்ன வேலி, மகாநதி, பாரதி கண்ணம்மா என அடுத்தடுத்து சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
இதில், சினிமாவை போலவே ஹீரோ, ஹீரோயின்கள், வில்லன், நகைச்சுவை நடிகர்கள் என பலரும் நடித்து இருப்பார்கள். அதில், ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரங்களை தெரிந்து கொள்வோம்.
பாண்டியன் ஸ்டோர் தனம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், அண்ணன் தம்பிகளின் பாச பிணைப்பினை கதையாக காட்டி வருகின்றனர். இதில் நடித்து வரும் சுஜிதா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.
பாக்கியலட்சுமி சுசித்ரா
டிஆர்பியில் முதல் மூன்று இடங்களில் வரும் சீரியலில் பாக்கியலட்சுமி ஒன்று என்று சொல்லலாம். மக்கள் தினமும் ஒரு எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் சீரியலாகவும் பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இத்தொடர் இல்லத்தரசிகளை மையமாக வைத்து தான் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடந்து வருபவர் சுசித்ரா இவர் ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.
பாரதிகண்ணம்மா வினுஷா தேவி
வினுஷா தேவி ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல் வந்தவர். இப்போது இரண்டாவது பாகத்தில் நடித்து வரும் இவருக்கு ஒரு நாளைக்கு 8000 ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.
தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா
தொகுப்பாளனியாக தான் பயணத்தை ஆரம்பித்த நக்ஷத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தொகுப்பாளர் தீபக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் அவ்வப்போது தோன்றி வருகிறார். இவருக்கு இந்த சீரியலில் மட்டும் நடிப்பதற்கு ஒரு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் கொடுக்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி ராதிகா
புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுவரட்டி. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது நடித்து வருகிறார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நடிப்பதற்கு ஒருநாள் சம்பளமாக ஏழாயிரம் ரூபாயை பெறுகிறார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.