ஈரோடு மகேஷிற்கு இவ்வளவு பெரிய மகளா? – அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Author: kavin kumar
16 August 2021, 7:42 pm
Quick Share

விஜய் டிவியில் தற்போது முக்கியமான ஆன்கர் ஆக மாறியுள்ளார் ஈரோடு மகேஷ். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவரது காமெடி சுவாரஸ்யமாக இருப்பதால் இவருக்கென ரசிகர்கள் குவிந்தனர். தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வருகிறார்.

ஒவ்வொரு போட்டியாளர்களின் பிளஸ் மைனஸ் பாயிண்டுகளை மிகச் சரியாக கணித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். ஈரோடு மகேஷ் சன் மியூசிக்கில் பணியாற்றிய ஸ்ரீதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமிழ்தா என்ற பெண் குழந்தை உள்ளது.

சின்னத்திரை மற்றும் சினிமாவில் பங்கேற்று வரும் ஈரோடு மகேஷ், தற்போது புது கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதன்முன் தன் மனைவி, மகளுடன் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஈரோடு மகேஷிற்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 481

13

2