“விஜய் Uncle என்னை பார்க்க வாங்க” – வைரல் குழந்தையுடன் வீடியோ சாட் செய்த தளபதி!

Author: Shree
31 March 2023, 4:08 pm
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரமுமான தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.

குறிப்பாக மற்ற நடிகர்களை விட விஜய்க்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம் தான். அவரது கியூட்டான நடிப்பும், நடனமும் குழந்தைகளை வெகுவாக கவரும். அந்தவகையில் பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒன்று தன் அம்மாவிடம், ‘தீ இது தளபதி” uncle’யை நம்ம வீட்டுக்கு வரச்சொல்லுமா என அழுது அடம் பிடித்துள்ளது.

பின்னர் யார் அது? என அந்த குழந்தையிடம் தெரியாதது போல் கேட்க, தெளிவாக “தீ இது தளபதி”பாட்டுல வருவாரு இல்ல அந்த அங்கிள் தான்” என செல்லக்கோபத்துடன் அந்த மழலை குழந்தை பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் குழந்தையின் வீடியோவினை உடனடியாக தளபதி விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்து குழந்தையை மகிழ்வித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 169

5

1