9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த பொங்கல் ரேஸ் வசூலில் வாரிசே முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ.40 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனிடையே, நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று கிசுகிசுக்கப்பட்டு, அது உண்மையில்லை என்று அதன்பின் தெரியவந்தது.
தற்போது நடிகர் விஜய்க்கும், சங்கீதாவிற்கும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதில் சங்கீதா தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரும் இருக்கிறார்கள். ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.