எங்க படத்துல விஜயகாந்த் இருக்காரு.. உங்ககிட்ட அனுமதி கேட்கணும்னு அவசியம் இல்ல..!

Author: Vignesh
31 July 2024, 10:58 am

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின், ஒளிப்பதிப்பாளர் விஜய் மில்டன் இந்த படம் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.

அதில், இந்த படத்தில் நாங்கள் முதலில் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைக்க முடிவு செய்தோம். இது தொடர்பாக, அவரது மனைவி பிரேமலதா அவர்களிடம் உரிய அனுமதி வாங்கி அதற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், கேப்டன் மறைந்து விட்டார்.

இதனால், தான் அவரது கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ஆனாலும், எனக்கு கேப்டன் விஜயகாந்த் மீது இருந்த அன்பு காரணமாக இந்த படத்தில் ஒரு காட்சியிலாவது அவர் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விஜயகாந்த் ஒரு நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு தலைவர், அவரை ஒரு வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தவறு. எங்கள் படத்தில் முதலில் கேப்டனாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அது நடக்காத காரணத்தினால் சத்யராஜ் நடித்துள்ளார்.

ஆனால், எனக்கு கேப்டன் விஜயகாந்த் மிகவும் பிடிக்கும். அவர் மீது இருந்த அன்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளேன். ஒருவர் மீது அன்பு வைக்க யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்த படத்தில், கேப்டன் விஜயகாந்த் மற்றும் எனக்குப் பிடித்த நடிகை சௌந்தர்யாவும் இடம்பெறும் காட்சி வைக்கப்பட்டுள்ளது என அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!