பிரபல நடிகரின் வெறியனாக 100 முறைக்கு மேல் விஜயகாந்த் விரும்பி பார்த்த திரைப்படம் – எது தெரியுமா?

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.

மேலும் சினிமாவை கனவாக கொண்டு வளர்ந்த திறமையான இளம் தலைமுறையினர் பலரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த பெருமை விஜயகாந்தையே சேரும். திரைப்பட கல்லூரி பட்டதாரிகளை இயக்குனராக அறிமுகப்படுத்தி உதவி செய்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வரும் அத்தனை பேரின் பசியை போக்கியவர் விஜயகாந்த். வயிறார சாப்பாடு போட்டு அதில் சந்தோஷப்படக்கூடய ஒரே நல்ல மனிதர் அவர். மேலும் விஜயகாந்தின் படப்பிடிப்புகளில் மட்டும் தான் அசைய உணவுகள் அதிகம் இருக்கும் ஊர்வன , பறப்பன நடப்பன என அனைத்தும் இருக்கும்.

விஜயகாந்த் ராவுத்தர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அங்கிருந்து தான் சாப்பாடு வரும். விஜயகாந்த் ஷூட்டிங்கிற்கு போனால் வயிறு நிறைஞ்சிடும்பா என சொன்ன நடிகர்கள் பலர் உள்ளனர். அவர் போட்ட சோறு தான் இன்றைக்கும் அவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கும் விஜயகாந்திற்கும் நல்ல நட்பு இருந்தது. மற்ற நடிகர்களின் டீ, காபி கொடுத்தே படம் எடுப்பார்கள். ஆனால், விஜயகாந்த் ஷூட்டிங்கில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், சூப், அசைவம் , சைவம் என குறையாமல் சாப்பாடு போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவு நல்ல மனம் கொண்ட மாமனிதர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார்.

பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விஜயகாந்த் எம்ஜிஆரின் தீவிர ரசிகராம். அவரின் வெறியனாக அவரது திரைப்படங்களை பார்த்து ரசித்து வளர்ந்தவர் தானாம் விஜயகாந்த். அப்படிதான், பல வருடங்களுக்கு முன் விஜயகாந்த் பேட்டி ஒன்றில், ” என் வீட்டுக்கு அருகே எங்க வீட்டு பிள்ளை படம் ஓடியபோது சண்டை காட்சிகளுக்காகவே 120 முறை பார்த்தேன்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமாரி போன்ற படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் அதன்பின் அவர் படங்களில் இல்லையே என நினைத்தேன். அப்போது வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். 1965ல் வெளிவந்த அந்த படத்தை 70 முறை பார்த்தேன். நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் இல்லை.. வெறியன்’ என கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு சினிமா மீது அவர் வைத்திருந்த காதல் தான் பின்னாளில் உச்ச நடிகராக உயர்த்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

1 hour ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

3 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

3 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

4 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

4 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

5 hours ago

This website uses cookies.