படப்பிடிப்பில் குடிச்சுட்டு கும்மாளம் அடிச்ச பிரபல நடிகர்கள்… சம்பவம் செய்த விஜயகாந்த்!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2024, 5:00 pm

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் விஜயகாந்த். நடிப்பில் மட்டுமல்ல, நிஜத்திலும் பாரிவள்ளலான விஜயகாந்த், சினிமா படப்பிடிப்பில் பொட்டன சாப்பாடு என்ற நிலையை மாற்றி இலையில் சாப்பாடு போட வைத்தவர்.

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகராக இருந்த போதே வழங்கினார். இவரால் பயனடைந்தவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை மாவட்டங்களிலும், கிராமங்களிலும் நிச்சயம் இருப்பார்கள்.

அப்படி நல்லது செய்து வந்த விஜயகாந்த், வார்த்தையை தவறாக விட்டவர்களை வெளுத்து வாங்கிவிடுவார். நடிகராக மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து, அச்சங்கத்தின் மீதுள்ள கடனை அடைத்தவர்.

வெளிநாட்டில் சினிமா நட்சத்திரங்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி கடனை அடைத்த பெருமை இவரையே சாரும். இவர் மறைந்த பின்பும் கூட இவர் செய்த நல்ல விஷயங்கள் சினிமா பிரபலங்கள் இன்று வரை கூறி வருகின்றனர்.

அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. முரளி, வடிவேலு கூட்டணியில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் சுந்தரா டிராவல்ஸ். இப்போதும் இந்த படத்தை டிவியில் போட்டால் பார்க்க ஒரு கூட்டமே இருக்கும்.

இந்த படத்தை தாஹா இயக்க,யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் தங்கராஜ் தயாரித்திருந்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது முரளியும் வடிவேலும் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்துள்ளனர். படத்தை பாதியில் கைவிட முடிவு செய்த தங்கராஜ், விஜயகாந்த்திடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

கோபத்தில் கொந்தளித்த கேப்டன், நேரடியாக படப்பிடிப்பு தளத்துக்கே சென்று, முரளி, வடிவேலுவை வெளுத்து வாங்கியுள்ளார். ஒழுங்கா நடிச்சு கொடுக்கலைனா தொலைச்சுடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்று அந்த படத்தை முடித்து கொடுத்ததாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 138

    0

    0