“LIGHTMAN மடியில அஜித் தூங்கினார்” – BIGG BOSS விஜயலக்ஷ்மி !

14 July 2021, 8:28 pm
Quick Share

தல அஜித், தேவையானி, ஹீரா நடிப்பில் வெளியான படம் காதல் கோட்டை. பார்க்காமலேயே காதல் என்ற புதிய கதையில் வெளியான படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பல தேசிய விருதுகளை வாங்கிய இந்த திரைப்படத்தை அகத்தியன் இயக்கினார். அந்த படம் வெளியாகி 25 வருடங்கள் ஆனதையெடுத்து #25years of kadhal kottai என ட்ரெண்ட் ஆனது.

பலரும் அது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரின் மகளான விஜயலட்சுமி தனது அனுபவங்களை வீடியோவில் பகிர்ந்து கொண்டார். விஜயலட்சுமி சென்னை 28, அதே நேரம் அதே இடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கூறுகையில், காதல் கோட்டை படம் வீடியோ இருபத்தைந்து வருடங்கள் ஆகிய நிலையில் உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நிறைய பேர் என்னிடம் பெரிய விஷயம் காதல் கோட்டை படம் எடுக்கும் பொழுது நீங்கள் தல அஜித்தை பார்த்தீர்களா என்ற கேள்விதான். நான் கனி அக்கா ரஞ்சனி ஆகியோர் அஜித் சாரை முதல் முதலில் பார்த்தது வான்மதி சூட்டிங்கில் தான். போனவுடன் எங்களை சேரில் அமர வைத்தார்கள். அஜித் சார் வந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்தோம், ஜாலியாக இருந்தது. அப்புறம் ஷாட் ரெடி என்று சொன்னார்கள், அது ஒரு சண்டை காட்சி. அப்போது டூப் போட வந்தார்கள். அதெல்லாம் முடியாது நான் தான் செய்வேன் என்று அடம் பிடித்து அவரே செய்தார்.

அதன் பின் சாப்பிட்டு விட்டு அவரை ஆள காணோம். எங்கே என தேடியபோது லைட்மேன் ஒருவர் அமர்ந்திருந்தார் அவரது மடியில் தலையை வைத்து கால் நீட்டி அழகாகத் தூங்கிக் கொண்டிருந்தார், பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அப்போது ஆசை படம் வெளியான சமயம். அதனால் அவர் மீது கிரேஸ் இருந்தது,. சும்மாவே அவருடைய ரசிகைகள்தான். அதன்பின் பெரிய பேன் ஆகிட்டோம். இப்படித்தான் அஜித் சார் Fan ஆனோம் என்று கூறினார்.

Views: - 422

9

2