CORONA-வை வீழ்த்தி வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் ! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

24 September 2020, 10:10 am
Quick Share

நிறைய சமூக சேவைகள் செய்து வரும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் இதுபற்றி உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் அவருடைய தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,

“கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்பி உள்ளார்” என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0