“இந்த பொழப்புக்கு தே**யா தொழில் செஞ்சுட்டு போலாம்” – விஜயின் தந்தை SA சந்திரசேகர் கோபம் !

20 October 2020, 5:59 pm
Quick Share

என்ன கால நேரமோ என்று தெரியவில்லை பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். சில நாட்கள் முன்பு கூட குஷ்பு இந்த காட்சியில் இணைந்துள்ளார். இன்று கூட வடிவேலு அந்த கட்சியில் சேரபோவதாக தகவல்கள் வருகின்றன.

இன்னும் ஒரு சில பிரபலங்கள் இணையப் போவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புரட்சி தளபதி விஷால், சமுத்திரகனி உள்பட இன்னும் ஒரு சில திரையுலக பிரமுகர்கள் பாஜகவில் இணைய போவதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பாஜகவில் சேர இருப்பதாக திடீரென சமூக வலைதளங்களில் அவரது பெயரில் உள்ள போலி அக்கவுண்ட்டின் மூலம் ஒரு நபர் வதந்தியை கிளப்பியுள்ளார்.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து செம்ம ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார். தான் பாஜகவில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்றும் இதை யாரும் நம்ப வேண்டாம்,

அந்த கணக்கு என்னுடைய பெயரில் உள்ள போலியான கணக்கு என்றும், இதை பற்றி நான் போலீஸாரிடம் புகார் தரபோவதாக கூறியுள்ளார், மேலும், இப்படி செய்து காசு சம்பாதிப்பதற்க்கு தே*யா தொழில் செஞ்சிட்டு போலாம்” என ஆவேசமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

Views: - 51

0

0