தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி, தனக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் விஜய். படம் ஓடுதோ இல்லையோ வசூலில் மட்டும் கவனம் பெற்று விடும் இவரின் படங்கள்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சக்கை போடு போட்டது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது குறித்து டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. லியோ படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது.
இப்படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்தது. அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையில், லியோ படம் LCU கதையாக இருக்கலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லியோ படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று ஒரு பேச்சு எழுந்து அப்படி ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கவில்லை என்று செய்தி மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் அந்த பேச்சு தொடங்கி இருக்கிறது காரணம் இந்த படத்திற்கான கதையை விவாதிக்கும் போது கமல்ஹாசனை மனதில் வைத்து தான் கதையை லோகேஷ் தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
கதைப்படி கமல்ஹாசன் நடிப்பதற்கான காட்சிகள் லியோ படத்தில் இருப்பதாகவும், ஆனால் இப்பொழுது வரை அப்படி ஏதும் காட்சிகள் எடுக்க படவில்லை, என்றாலும் இனிமேல் கமல் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும், அதையும் இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.
இப்படி லியோ படத்தில் ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வருவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது.
இப்படி லியோ படம் குறித்து ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வருவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. அதனால் கூட கமலின் அப்டேட் குறித்த விஷயங்களை வெளியிடாமல் கடைசியாக வைத்துக் கொள்ளலாம் என்று லோகேஷ் முடிவு செய்து இருக்கலாம் என ரசிகர்களால் நம்பப்டுகிறது.
இதனிடையே சமூக வலைதளங்களில் லியோ படம் நிச்சயமாக LCU-வில் தான் வருவதாக கூறி ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.