மாஸ்டர் படத்தின் பூனையின் விலை இவ்வளவு அதிகமா? – அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

14 January 2021, 11:28 pm
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளத்தையே நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆண்ட்ரியா தொடங்கி சாந்தனு, கௌரி கிஷான், அழகம்பெருமாள், அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சீவ் என நீண்டுகொண்டே போகிறது அந்த லிஸ்ட்.

பொங்கலுக்கு முந்தைய நாள் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஒவ்வொரு பிரேமிலும் என்ஜாய் செய்கிறார்கள். கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் ஒரே அளவிலான மாஸ் காட்சிகளை எடுத்திருந்தாலும் தனது வழக்கமான பாணியை கொஞ்சம் தளர்த்தி விஜய்க்காக எடுக்கப்பட்டது போல் தோன்றாமல் இல்லை.

வழக்கமாக விஜய் படத்தில் பயன்படுத்தப்படும் ஆடைகளை தாங்களும் அணிந்து வந்து மாஸ் காட்டும் ரசிகர்கள் இந்த முறை மாஸ்டர் திரைப்படத்தில் வரும் பூனை மீது கண் வைக்க தொடங்கினார்கள். போகிற போக்கை பார்த்தால் பூனையையும் தியேட்டருக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்ற அளவு மீம்ஸ்கள் பறந்துகொண்டிருந்தன.

ஆனால் அந்தப் பூனையின் விலையைப் பார்த்தால் கொஞ்சம் கொஞ்சம் அதிர்ச்சி ஆகித்தான் போனார்கள் ரசிகர்கள். பெர்சியன் ரகத்தை சேர்ந்த வளர்ந்த பூனையின் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாய். இந்தியாவில் அதன் குட்டி 10 முதல் 18 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனைக் கேட்டு ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

Views: - 18

0

0