8 மாசம் ஆகும்? பின் வாங்கும் விஜய்யின் தளபதி 65?

26 January 2021, 4:16 pm
Quick Share

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி65 படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, நாசர், சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், கௌரி கிஷா, பிரிகிதா, பூவையார், ரம்யா சுப்பிரமணியன், சாய் தீனா, ரமேஷ் திலக், அருண் அலெக்சாண்டர், மகாநதி சங்கர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள படம்
பல பிரச்சனைகள், போராட்டங்களை சந்தித்த மாஸ்டர் படம் ஒருவழியாக கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வந்துள்ளதால்,

ரசிகர்கள், குடும்ப பெண்கள் என்று அனைவருமே திரையரங்கிற்கு சென்று மாஸ்டர் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. என்னதான், 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுக்குமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் வெறும் மூன்றே நாட்களில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. அதோடு, 3 நாட்களில் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் ரூ.100 கோடி வசூல் கொடுத்துள்ளது. தமிழகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் கொடுத்த விஜய்யின் படங்களில் மாஸ்டர் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக தமிழகத்தில் வசூல் கொடுத்துள்ளன. இதே போன்று உலக அளவிலும் மாஸ்டர் படம் ரூ.220 கோடி வசூல் கொடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.115 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்த விஜய் படங்களில் மாஸ்டர் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக மெர்சல் படம் ரூ.250 கோடி, சர்கார் ரூ.250 கோடி மற்றும் பிகில் ரூ.300 கோடி என்று வசூல் கொடுத்துள்ளன. அதோடு, மாஸ்டர் படம் உள்பட விஜய்யின் நடிப்பில் வந்த கடைசி 4 படங்கள் மொத்தமாக ரூ.1000 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார் என்பதெல்லாம் ஏற்கனவே வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இந்த மாத இறுதிக்குள் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி65 படத்திற்கு பூஜை போடப்படுகிறது. மேலும், 8ஆம் தேதி தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி65 திரைக்கு வருகிறது என்று தளபதி65 டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தளபதி65 டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்து தேர்வு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் படத்திற்கு 8 மாதங்கள் தேவைப்படுவதால், தளபதி65 படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தளபதி65 படத்திலும் பூவையார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், தளபதி65 படம் குறித்து முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே, தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். ஆனால், இது வெறும் வதந்தி தான் என்று அருண் விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் விக்கிப்பீடியா பக்கத்தில் தளபதி65 படத்தில் விஜய், அருண் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, மற்றும் பக்கத்தில், விஜய் ஹீரோ என்றும் விக்ரம் வில்லன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக சியான் விக்ரம் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருமுகன் படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் கிட்டத்தட்ட 10க்கும் அதிகமான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் வில்லன் கதாபாத்திரமும் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 21

0

0