விஜய் சேதுபதியின் “கடைசி விவசாயி” வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Author: Rajesh
30 January 2022, 1:18 pm
Quick Share

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளி போயிருந்த நிலையில், இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்பட்டது. சோனி லிவ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ‘கடைசி விவசாயி’ படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Views: - 1507

0

0