தொடர் தோல்விகள்..! கதைகளில் கோட்டை விடுகிறாரா விஜய்சேதுபதி..?

Author: Rajesh
4 February 2022, 4:47 pm
Quick Share

‘புதுப்பேட்டை’, ‘நான் மகான் அல்ல’, ‘வெண்ணிலா கபடிக் குழு’, போன்ற படங்களில் ஏதோ ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த விஜய் சேதுபதி இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இந்த மாபெரும் வெற்றிக்கு அவருடைய விடாமுயற்சியே காரணம் என்றே கூறாலம். விஜய் சேதுபதியின் தன்னம்பிக்கை சொல்லும் வீடியோக்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அந்த அளவிற்கு அவரது நம்பூக்கையூட்டும் வார்த்தைகளை வேதவாக்குகளை இன்றைய இளைஞர்கள் நினைத்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக, அவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், விஜய் சேதுபதி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

இதனிடையே விஜய் சேதுபதிக்கு கதைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். தற்போது, இருக்கும் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைவருமே தொடர் தோல்விகளை அள்ளிக் கொடுத்தவர்கள் தான். ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் விஜய்சேதுபதி அதிகளவில் தாக்கப்பட்டு வருவது தான் அவரது ரசிகர்களை சற்று கவலையடைச்செய்துள்ளது.

தியேட்டர், டிவி, ஒடிடி, யூ டியூப் என எங்கே திரும்பினாலும் விஜய் சேதுபதி முகம்தான். ஒரு வேலை எல்லாப் பக்கமும் அவரது முகம் தெரிவதால் தான், தற்போது மார்க்கெட்டை இழந்துள்ளாரோ என்ற கருத்தும் நிலவி வருகின்றது. தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு என்று இருந்த பிம்பத்தை உடைத்தவர் என்பதில் விஜய்சேதுபதியில் பங்கு மிகப்பெரியது. வெற்றியின் உச்சத்தில் இருந்த அப்படிப்பட்ட நடிகனை, தற்போது தனிப்பட்ட முறையில் விமர்சனங்களால் தாக்கப்படுவது சற்றே வருத்தப்படக் கூடிய செய்திதான்.

இந்த நிலையில், தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நகைச்சுவை காதல் படமாக வெளியாக உள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதனுடன் கே ஜி எஃப் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏப்ரல் 14-ம் ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே போல், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் வெளியாகவுள்ளது .இந்தப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்த நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஜய்சேதுபதிக்கு இது ஒரு முக்கியமான படமாக சினிமா வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

Views: - 555

0

0