விக்ரம்-க்கு நடிக்கவே தெரியாது.. பிரபல இயக்குனர் சர்ச்சை பேச்சு…

Author: Rajesh
17 March 2022, 12:23 pm
Quick Share

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்தான் ராஜகுமாரன். இவர் நடிகை தேவையானியின் கணவர் ஆவர். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது திரையுலக பயணம் குறித்து பல முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் விக்ரம் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ராஜகுமாரன் நீவருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவரது இயக்கத்தில் உருவான விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் சரத்குமார், விக்ரம், தேவயானி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

குடும்பங்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் இந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் விக்ரம் ஒரு முறை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதைப் பற்றி பேசிய ராஜகுமாரன் சூரியவம்சம் திரைப்படம் போன்றே இந்த திரைப்படமும் குடும்பங்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது.

ஆனால் விக்ரம் ஏன் அப்படி கூறினார் என்று தெரியவில்லை. சேது படம்தான் அவரை பிரபலமாக்கியது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மை அல்ல இந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் தான் ஃபேமிலி ஆடியன்ஸ் இடம் அவரை கொண்டு போய் சேர்த்தது. சும்மா கை, கால்களை இழுத்து கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு நடந்து செல்வது போன்று நடித்து விட்டால் அவர் சிறந்த நடிகர் கிடையாது.

டயலாக் இல்லாத காட்சிகளில்கூட டைரக்டர் கட் சொல்லும் வரை பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிப்பதுதான் நடிப்பு. அது விக்ரமிடம் நிச்சயமாக கிடையாது. அவரால் ஒன்று கமல்ஹாசன் போல நடிக்க முடியும். இல்லை என்றால் ரஜினி போல் நடிக்க முடியும்.

இது இரண்டையும் விட்டால் அவருக்கு நடிக்க தெரியாது. அதை நான் என் படத்தில் சில முறை கவனித்திருக்கிறேன். மேலும் விக்ரமை நல்ல நடிகர் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தன்னுடைய கருத்தை மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Views: - 643

0

0